Saturday, February 05, 2011

அம்மா..

அம்மா...
உன் மரண எல்லையை தொட்டாய்
என் ஜனன வாயலை அடைய
என்னை செதுக்காமல் உன்னை செதுக்கினாய்
நான் சிற்பமாவதற்கு...

அம்மா ...
என் துன்பத்தை நீ சுமந்து
இன்பம் அளித்தாய் எனக்கு
உனக்கு மகனாக வரமளிதிருகிறாய்
நான் தவம் செய்யாமலே ...

அம்மா
பல ஜன்மம் ஆனாலும்
சில ஜனனம் எனக்களிக்க
தவம் செய்கிறேன்
வரமளிப்பாயா?

No comments: