இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி டாக்குமென்டரிப் படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது.
இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், டிவி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றி செய்தியை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை.
இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் டுடே இந்த பதை பதைக்க வைக்கும் டாக்குமென்டரிப் படத்தை ஒளிபரப்பவுள்ளது. மூன்று நாட்கள் இதை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே டிவி.
இன்று இரவு 10 மணிக்கு முதல் பகுதி ஒளிபரப்பாகிறது. நாளை இரவு 11 மணிக்கும், சனிக்கிழமை 10 மணிக்கும் மற்ற பகுதிகள் ஒளிபரப்பாகவுள்ளன.
Please watch this.dont miss it..
No comments:
Post a Comment