என் நண்பன் கேட்டுக்கொண்ட காரணத்தால் என் அஞ்சான் பட விமர்சனம் தமிழில் உங்களுக்காக....
லிங்குசாமி ரன் என்ற படத்தின் மூலம் நம்மள தியேட்டர விட்டு ஓட விடாமல் நம்மையும் படத்தோடு ஓட விட்டிருப்பார்..அது திரைக்கதை.... ஆனந்தம் என்ற படம் மூலம் நம்மை ஆனந்தப்படுத்தி இருப்பார்..அது சென்டிமெண்ட்....சண்டைக்கோழி படம் மூலம் நம்மையும் சண்டை போட ஆசை ஏற்படுத்தி இருப்பார்...அது சண்டை..
அதன் பின் ஜீ யை ச்சி என்றும்,பீமா வை கோமாவாக்கிய பெருமை அவரையே சேரும்...
பின்னர் ரெண்டு படம் ஏதோ எடுத்து ஓட காசு,பணம்,money,துட்டு என்று சில நல்ல படங்கள் எடுத்தார்...
இறுதியில் அஞ்சான் என்று ஒரு படத்தை சூரியா,சமந்தா,சந்தோஷ சிவன்,யுவன் ஷங்கர் ராஜா என்றொரு மிக பெரிய பட்டாளத்தை வைத்து எடுத்த இந்த படம் பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால் லிங்குசாமி என்றொரு நல்ல டைரெக்டர் இடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை...
சரி..கதை என்ன...
சூரியாவின் நண்பனை (தாதா) கொன்றவர்களை பழி வாங்குவது..
இதில் அங்ககே பாட்டு,சென்டிமெண்ட்,ஃபைட்,காமெடீ என்று நம்மை வெடிக்க வைப்பது என்று நம்மை இருக்கையில் இருந்து சீக்கிரம் எழ செய்திருக்கிறார்...
இதற்கு ஏன் சந்தோஷ சிவன் ,யுவன் ஷங்கர் ராஜா வை போட்டார்கள் என்று லிங்குசாமி மட்டுமே தெரிந்த உண்மை..சமந்தா இந்த படத்தின் மூலம் ஏன் இப்படி நடித்து காட்டி இருக்கிறார் என்று புரியவில்லை...அதற்கு காரணமும் இல்லை..
சரி ஒரு சராசரி ரசிகனாக நான் 120ரூ போட்டு படம் பார்த்தால் 10ரூ சூரியாவிருக்கும் ,20ரூ சமந்தாவிற்கும் தான்...
நான் எழுதும் இந்த விமர்சனம் அஞ்சான் மட்டுமில்லை உக்கார்ந்து பாக்க முடியாத உதயன்,நம்மை மூன்றாம் உலகிற்கு இழுத்து சென்ற இரண்டாம் உலகம்,நம்மை கொலையை கொன்ற நடுநிசி நாயகன் போன்ற படங்களுக்கும் பொருந்தும்...பார்த்து நேரத்தை வீணாக்காதீர்கள்....
சூரியா என்றொரு நல்ல நடிகருக்காக பார்கலாம் ஒரு தடவை அவ்வளவு தான் ...
அஞ்சான் - ஆஞ்சித்தான்
No comments:
Post a Comment